என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொது இடம்"
- பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்
- மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
திருப்பூர்:
பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.அரசு அலுவலர்களின் ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக முதன்முறையாக 100 ரூபாய், மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் 200 ரூபாய், 500 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
மேலும் தொடர்ந்தால் மூன்று மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு சட்டம் இருப்பது குறித்த விழிப்புணர்வை, திருப்பூர் மாவட்டத்தில் சுகாதார துறையினர் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து, அபராத நடவடிக்கைகளை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. இதனால் டீக்கடை, பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் பலரும் புகைக்கின்றனர்.
பொது இடங்களில்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கைகுறிப்பாக பஸ் நிலையத்தில் சிறார்கள் சிலர் எப்போதும் புகைத்தவாறு நிற்கின்றனர். போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாண்டிகோவில் ரிங் ரோட்டில் பொது இடத்தில் மது குடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பொதுமக்களுக்கு இடையூறு செய்து வந்தனர்.
மதுரை
மதுரை பாண்டி கோவில் ரிங்ரோட்டில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். வேண்டுதல் வைத்துள்ளவர்கள் உறவினர்களை அழைத்து வந்து கோவிலில் கிடாய் வெட்டி பூஜை செய்வது வழக்கம். இதனால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.
இந்தநிலையில் சிலர் பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்துவந்தனர். இதனையறிந்த போலீசார் அந்தப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த உத்தங்குடி அய்யணன் நகர் ஸ்ரீராமன்(வயது27), வாடிப்பட்டி கச்சைகட்டி பசும்பொன் நகர் ரமேஷ்(35), சுரேந்தர்(36) ஆகிய 3பேைர போலீசார் கைது செய்தனர்.
- அன்பழகன் நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி உள்ளார்.
- சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாசமாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பொன்பேற்றி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). இவர், நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி, ஆபசமாக பேசிவந்ததாக, பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதன்பேரில், நெடுங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாச மாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.
- 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த வாலிபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் சிங்கனூர் பிரிவில் 2 வாலிபர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தகராறில் ஈடுபடுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் போலீசார் சென்ற போது அங்கு கையில் கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருந்த கரைப்புதூர் ஊராட்சி கெம்பே நகர் ஹரிதாஸ் மகன் மாமலைவாசன்(26) மற்றும் பல்லடம் மாணிக்கபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா(32) ஆகியோரை கைது செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- பொது இடத்தில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
- திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதி.மு.க. உள்ளது.
மதுரை
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதி.மு.க. உள்ளது. ஏழைகளுக்காக 1972 -ம் ஆண்டு இந்த இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். அவர் இருக்கும் வரை தி.மு.க. கோட்டை பக்கம் எட்டிப் பார்க்க முடியவில்லை. அதனைத்தொடர்ந்து அம்மா அதி.மு.க.வை நாட்டின் 3-வது பெரிய இயக்கமாக உருவாக்கினார்.
தி.மு.க.வினர் எங்களை வழிநடத்திச் செல்லும் ஜெயலலிதா காலில் விழுவதை கேலி-நையாண்டி செய்தனர்.
இன்றைக்கு தி.மு.க.வின் தன்மானம், சுயமரியாதை எங்கே போனது? தஞ்சையில் முதல்-அமைச்சரின் மகன் உதயநிதி வந்தபோது தஞ்சை மேயர் அங்கியுடன் சென்று உதயநிதியின் காலில் விழுந்துள்ளார்.
இதனை உதயநிதி கண்டிக்காமல் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். காலில் விழுவதை விமர்சித்த தி.மு.க. இதற்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறது?
மேயர் அங்கியுடன் பொது இடத்தில் காலில் விழும் உரிமையை யார் கொடுத்தது? மூத்தோர் காலில் இளையோர் விழுவது தான் தமிழர் பண்பாடு, கலாச்சாரம்.
இன்றைக்கு வயது குறைந்தவர் காலில் மூத்தோர் விழுந்து சுயமரியாதையை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
இந்த புது கலாச்சாரம் தான் தி.மு.க. அரசின் திராவிட மாடலா? என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்